தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை கடந்த 2-ம் தேதி காலை 8-மணிக்கு தொடங்கி அடுத்தமறுநாள் மாலை வரை நடைபெற்றது. இந்த தேர்தலில் மாவட்ட கவுன்சிலர் மற்றும் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் பதவிகளுக்கு திமுக கூட்டணி மற்றும் அதிமுக கூட்டணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது.
பின்னர் இறுதியாக மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில் மாவட்ட கவுன்சிலர் பதவியில் திமுக 240 இடங்களுக்கு மேலாகவும் , அதிமுக 210 இடங்களுக்கு மேலாகவும் கைப்பற்றியது.மேலும் ஒன்றிய கவுன்சிலர் பதவியில் 2000 இடங்களுக்கு மேலாகவும் , அதிமுக 1700 இடங்களுக்கு மேலாகவும் கைப்பற்றியது.
இந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவில் அதிமுக கூட்டணி விட திமுக கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றியதாக அறிவித்தது.இந்நிலையில் திருவண்ணாமலை, திருவள்ளூர், நாமக்கல், கரூர், தர்மபுரி, மன்னார்குடி, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு செய்து அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றிருப்பதாகவும்.
அதனால் வெற்றி பெற்ற ஒன்றிய மற்றும் மாவட்ட கவுன்சிலர்கள் பதவியேற்க தடை விதிக்க கோரி திமுக சார்பில் அவசர முறையீடு செய்யப்பட்டுள்ளது.இன்று நீதிமன்றம் விடுமுறை என்பதால் நீதிபதி ஆதிகேசவலு முன்பு அவரது இல்லத்தில் அவசர முறையீடு செய்தார். ஆனால் நீதிபதி ஆதிகேசவலு தலைமை நீதிபதியிடம் அனுமதி பெற்றால் மட்டுமே அவசர வழக்கை விசாரிப்பதாக தெரிவித்தார்.
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…
பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…
சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…
சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,…
டெல்லி : நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரில் டெல்லி அணியும் ராஜஸ்தான் அணியும்மோதியது . இந்த போட்டி சூப்பர் ஓவர் வரை…