திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கைது.!
நீதிபதிகள், பட்டியலின மக்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியை காவல்துறையினர் கைது செய்தனர்.
நீதிபதிகள், பட்டியலின மக்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக திமுக அமைப்பு செயலாளர் மீது ஆதித்தமிழர் மக்கள் கட்சி தலைவர் கல்யாண் குமார் என்பவர் காவல் துறையினரிடம் புகார் அளித்தார்.
இந்நிலையில், அந்த புகாரின் அடிப்படையில், ஆர்.எஸ்.பாரதியை இன்று காலையில் சென்னையில் உள்ள அவரின் வீட்டில் கைது செய்யப்பட்டார். மேலும் அவர் மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.