உதயநிதி ஸ்டாலினுக்காக திமுக இளைஞரணி செயலாளர் பதவி ராஜினாமா?தற்போதைய இளைஞரணி செயலாளர் சாமிநாதன் விளக்கம்

உதயநிதி ஸ்டாலினுக்கு பதவி கொடுப்பது பற்றி திமுக தலைவர் ஸ்டாலின் முடிவு செய்வார் என்று திமுகவின் முன்னால் அமைச்சர் வெள்ளகோவில் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
திமுகவை பொருத்தவரை கருணாநிதிக்கு பின்னர் அவரது மகன் மு.க.ஸ்டாலின் திமுக தலைவராக பதவி வகித்து வருகிறார்.அவருக்கு அடுத்து திமுக தலைமை பதவி யாருக்கு கிடைக்கும் என்று கேள்விக்கு முதலில் பரிந்துரையாவது ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் தான்.அந்த வகையில் சமீபத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக இளைஞரணி செயலாளர் பதவி வழங்கப்படும் என்ற தகவல் அதிகம் வெளியாகி வருகிறது.
ஆனால் தற்போது திமுகவின் முன்னால் அமைச்சர் வெள்ளகோவில் சாமிநாதன் திமுக இளைஞரணி செயலாளர் பதவியில் உள்ளார்.இந்நிலையில் திருப்பூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் வெள்ளகோவில் சாமிநாதன் கலந்துகொண்டார்.இதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில், திமுக இளைஞரணி செயலாளர் பதவியை ராஜினாமா செய்யவில்லை.திமுக இளைஞரணி செயலர் பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் அனுப்பப்பட்டதாக பரவிய தகவலில் உண்மையில்லை.உதயநிதி ஸ்டாலினுக்கு பதவி கொடுப்பது பற்றி திமுக தலைவர் ஸ்டாலின் முடிவு செய்வார் என்று தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
அவரு கண்ணுல தெரியுது! 2027 உலகக்கோப்பைக்கு ஸ்கெட்ச் போட்ட ரோஹித்! ரிக்கி பாண்டிங் கணிப்பு!
March 13, 2025
“வெளியே வரல உள்ளயே வச்சு சுட்டுட்டாங்க”.. பாகிஸ்தான் ரயில் கடத்தலில் நடந்த திகில் சம்பவங்கள்!
March 13, 2025