திமுக பேரணி -இன்று விடுப்பு எடுக்க தடை
- குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக இன்று பேரணி நடைபெறுகிறது.
- போக்குவரத்து ஊழியர்கள் இன்று விடுப்பு எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது .
குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சிகள் சார்பாக குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராகஇன்று பேரணி நடைபெறுகிறது.
எனவே குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக இன்று எதிர்க்கட்சிகள் பேரணி நடத்த இருக்கும் நிலையில் சென்னை மாநகர போக்குவரத்து ஊழியர்கள் இன்று விடுப்பு எடுக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .மேலும் வார விடுமுறை மற்றும் பணி ஓய்வில் இருப்பவர்களும் கட்டாயம் பணியில் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.