திமுக பொதுக்கூட்டம்.. காவல்துறை வழக்குப்பதிவு..!

திமுக பொதுக்கூட்டத்தில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றவில்லை எனக்கூறி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான பொதுத்தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தலை சந்திக்க திமுக தயாராகி வருகிறது. இந்தநிலையில், திமுக சார்பில் நாளை மறுநாள் வேட்பாளர் பட்டியலும், வருகின்ற 11-ம் தேதி தேர்தல் அறிக்கை வெளியிடப்படுகிறது. திமுக சார்பில் 11-வது மாநில மாநாடு நேற்று திருச்சியில் நடந்தது.
மு .க ஸ்டாலின் தனது பிறந்த நாளான மார்ச் 1-ம் தேதி இதை அறிவித்தார். இக்கூட்டம் “தமிழகத்தில் விடியலுக்கான முழக்கம்” என்ற தலைப்பில் மாநாடு நடத்தப்படும் என அறிவித்தார். அதன்படி திருச்சி -சென்னை பைபாஸ் சாலையில் உள்ள சிறுகனுரில் சுமார் 750 ஏக்கரில் பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் 5 லட்சத்திற்கு மேற்பட்டோர்அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டு இருந்தது. பல லட்சம் தொண்டர்கள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
இந்நிலையில், நேற்று பொதுக்கூட்டம் நடத்திய திமுகவினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திமுக பொதுக்கூட்டத்தில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றவில்லை எனக்கூறி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.