சூரப்பாவை நீக்க கோரி.. உதயநிதி ஸ்டாலின் தலைமையில் போராட்டம்..!
அண்ணா பல்கலைக்கழக உறுப்புகல்லூரிகள், பொறியியல் கல்லூரி முன் திமுக இளைஞரணி, மாணவரணி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அண்ணா பல்கலைக்கழகம் மாநில அரசின் தொடரவும், துணை வேந்தர் சூரப்பாவை நீக்கவும் வலியுறுத்தி, சென்னை கிண்டியில் உள்ள பல்கலை. முன்பு உதயநிதி ஸ்டாலின், ஆர்.எஸ். பாரதி, மாணவர் அணி துணை செயலாளர் கணேசன் உள்ளிட்டோர் பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு முன் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மத்திய சிறப்பு அந்தஸ்து அளிப்பது தொடர்பாக துணை வேந்தர் சூரப்பா மத்திய அரசுக்கு தமிழக அரசு ஒப்புதலின்றி கடிதம் எழுதினார் என கூறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.