அதிமுக ஆட்சியை விரட்டும் வரை திமுக போராட்டங்கள் தொடரும்- மு.க.ஸ்டாலின்
அதிமுக ஆட்சியை விரட்டும் வரை திமுக போராட்டங்கள் தொடரும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.அப்பொழுது அவர் பேசுகையில்,தமிழ்நாட்டில் மாநிலத்தின் உரிமையை பறிக்கும் அதிமுக ஆட்சியை விரட்டும் வரை திமுகவின் போராட்டம் தொடரும் என்று தெரிவித்தார்.மேலும் அவர் கூறுகையில்,திமுகவில் உள்ளவர்கள் யாரும் குடும்ப அரசியல் செய்ய வில்லை.ஒவ்வொருவரும் குடும்பம் குடும்பமாக திமுகவிற்காக உழைக்கிறார்கள் என்று தெரிவித்தார்.