மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலை நேரில் சந்தித்து திமுக தலைவர் ஸ்டாலின் நலம் விசாரித்தார்.
கடந்த 2016-ஆம் ஆண்டு எதிர்பாராமல் நடந்த ஒரு விபத்தின்போது கமல் காலில் ஏற்பட்ட எலும்பு முறிவை சரிசெய்ய டைட்டேனியம் கம்பி பொருத்தப்பட்டது .அப்போது காலில் பொருத்திய டைட்டேனியம் கம்பியை அகற்ற கமலுக்கு இன்று அறுவை சிகிச்சை செய்யப்படும் என்று மக்கள் நீதி மய்யம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று கமல்ஹாசனுக்கு சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.இந்த சிகிச்சையில் அவருக்கு காலில் பொருத்திய டைட்டேனியம் கம்பி அகற்றப்பட்டது.இதனை தொடர்ந்து அங்கு சிகிச்சை பெற்ற கமல்ஹாசனை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
சிகிச்சை முடிந்து சில நாட்கள் ஓய்வுக்குப் பிறகு கட்சியினரை கமல் சந்திப்பார் என்று தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…
கேரளா : கேரள மாநிலத்தில் வயநாடு மக்களவை தொகுதி, செலக்கரா மற்றும் பாலக்காடு சட்டமன்ற தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் பதிவான…
கர்நாடகா : மாநிலத்தில், மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…
வயநாடு : இந்த ஆண்டில் முன்னதாக நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, வயநாடு…