திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அவசர ஆலோசனை…!
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கவுள்ளார் 3வது நீதிபதி சத்யநாராயணன். 3வது நீதிபதி சத்யநாராயணன் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்குகிறார்.
18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பின்போது முதலமைச்சர் பழனிசாமி சார்பில் மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் ஆஜராகிறார். தகுதிநீக்க எம்எல்ஏக்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் மோகன் பராசரன், பி.எஸ்.ராமன் ஆஜராகின்றனர்.சபாநாயகர் தரப்பில் ஆரியமா சுந்தரம், அரசு தலைமை கொறடா தரப்பில் முகுல் ரோத்தகி ஆஜராகவுள்ளனர்.
இதனால் 18 எம் எல் ஏக்கள் தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பு இன்று காலை வரும் நிலையில் முதலமைச்சர் பழனிசாமி இல்லத்தில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் 1 மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனையில் ஈடுபட்டனர்.இதன் பின் முதலமைச்சருடனானஆலோசனைக்கு பிறகு, அமைச்சர் கே.பி.அன்பழகன் வீட்டில் அமைச்சர் சி.வி.சண்முகம் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார் . அமைச்சர்கள் எம்.சி.சம்பத், துரைகண்ணு உடன் உள்ளார்.
இது ஒருபுறம் இருக்க திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். மக்களவை தொகுதி பொறுப்பாளர்களுடன் திமுக தலைவர் ஸ்டாலின் ஆலோசனை.