திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு…!
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு .
வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜவுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைப்பது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலினை சந்திக்க, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று சென்னை வந்தடைந்தார்.தேசிய அரசியலில் பிரதமர்களை உருவாக்குவதில் திமுக தொடர்ந்து முக்கிய பங்கு வகித்து வருகிறது.
இந்நிலையில் எம்.பி. தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் ஒரு பகுதியாக ஸ்டாலினையும் சந்திக்கிறார் சந்திரபாபு நாயுடு.இதன் பின்னர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வீட்டில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்தார் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு .சந்திப்பில் துரைமுருகன், டி.ஆர்.பாலு, ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.