3 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தலை நடத்த திமுக மனு..!
தமிழகத்தில் காலியாக உள்ள மூன்று மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தலை உடனடியாக நடத்த கோரி திமுக சார்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
அதிமுகவின் வைத்தியலிங்கம், முனுசாமி ஆகியோர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். மேலும், அதிமுக எம்.பி. முகமது ஜான் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். இதனால், தமிழ்நாட்டில் காலியாக உள்ள மூன்று மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் நடத்த வேண்டும் என திமுக பொருளாளர் டி.ஆர். பாலு திமுக எம்.பி வில்சன் ஆகியோர் இந்திய தேர்தல் தலைமை ஆணையத்தில் மனுவை கொடுத்துள்ளனர்.
சமீபத்தில் தமிழகத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் ஏற்கனவே அதிமுக எம்.பி-களாக மாநிலங்களவை இருந்த கே.பி முனுசாமி, வைத்திலிங்கம் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏ-வாக தேர்வு செய்யப்பட்டதால் தங்களது எம்.பி பதவியை ராஜினாமா செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.