Breaking :உள்ளாட்சி தேர்தலுக்கு தடை விதிக்க கோரி திமுக மனு..!
தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த கடந்த 3 ஆண்டுகளாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உச்சநீதிமன்றம் அக்டோபர் மாதம் இறுதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டுமென ஜூலை மாதம் உத்தரவுவிட்டது.
ஆனால் அதற்கு மாநில தேர்தல் ஆணையம் மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றதால் அதை காரணமாக காட்டி மேலும் நான்கு வாரம் அவகாசம் கேட்டனர்.
இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்திற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி தீபக் குப்தா தலைமையில் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி நீதிமன்றத்தில் டிசம்பர் முதல் வாரம் குறிப்பாக இரண்டாம் தேதி உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அறிவிப்பை வெளியிட முயற்சி மேற்கொண்டிருக்கிறோம் என கூறினார்.
அப்போது திமுக வழக்கறிஞர் அபிஷேக் மானு சிங்வி குறுக்கிட்டு தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் தொகுதி மறுவரையரை பணிகள் நடைபெறாத உள்ளாட்சித் தேர்தல் எப்படி நடத்தமுடியும் என கேள்வி எழுப்பினார்..? இருதரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதி டிசம்பர் 13-ம் தேதிக்குள் தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பான அறிவிப்பை வெளியிட வேண்டும் , மேலும் முழுமையான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தார்.
இந்நிலையில் தமிழகத்தில் தொகுதி மறு வரையறை பணிகள் நிறைவு செய்யாமல் உள்ளாட்சித் தேர்தல் நடத்தக் கூடாது என கூறி உச்சநீதிமன்றத்தில் திமுக மனு கொடுத்து உள்ளது.ஏற்கனவே தொகுதி மறு வரையறை தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு வராத நிலையில் தேர்தலை நடத்த தடை விதிக்க வேண்டும் திமுக கூறியுள்ளது.
உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிடும் முன் தொகுதி மற்றும் வார்டு மறுவரையறை இட ஒதுக்கீடு உள்ளிட்ட சட்ட முறையில் பூர்த்தி செய்ய தமிழக தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் எனவும் மேலும் உள்ளாட்சி தேர்தல் பட்டியலை வெளியிட உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தனர்.