சேலம்: அதிமுக பிரமுகர் சண்முகம் கொலை வழக்கில் திமுக பிரமுகர் சதீஸ் உட்பட 8 பேரை சேலம் போலீசார் கைது செய்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
சேலம் மாவட்டம் கொண்டாலம்பட்டியை சேர்ந்த அதிமுக பிரமுகரும், ரியல் எஸ்டேட் தொழிலதிபருமான சண்முகம், நேற்று இரவு அம்பாள் ஏரி பகுதியில் உள்ள தனது அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பி சென்று கொண்டிருக்கையில் மர்ம கும்பலால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யாமல் சண்முகம் உடலை வாங்க மாட்டோம் என சண்முகம் குடும்பத்தினரும், அதிமுக கட்சியை சேர்ந்தவர்களும் சேலம் மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி பின்னர் போராட்டம் கைவிடப்பட்டது.
சேலம் மாநகர் காவல்துறையினர் சார்பில் 5 தனிப்படைகள் அமைத்து சண்முகம் கொலை தொடர்பானவர்களையும், சந்தேகத்தின் பெயரிலும் சிலரை கைது செய்து தங்கள் விசாரணையை தொடங்கினர். இந்த கொலை சம்பவத்தில் சந்தேகிக்கும் முக்கிய நபரான திமுக பிரமுகர் சதீஸ் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர் திமுக கவுன்சிலர் தனபாக்கியம் என்பவரது கணவர் ஆவார். சதீஸ் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை : இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள "குட் பேட் அக்லி" திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி…
சென்னை : நடிகர் கமல்ஹாசனுக்கு சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) ஒரு முக்கியமான எச்சரிக்கை அறிவிப்பை…
மதுரை : மதுரை மாவட்டம் கள்ளபட்டியைச் சேர்ந்த முத்துக்குமார் உசிலம்பட்டி காவல் நிலையத்தில் முதல் நிலைக் காவலராகவும், காவல் ஆய்வாளரின்…
சென்னை : ஐபிஎல்-ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான நேற்றைய போட்டியில், பெங்களூரு…
பாங்காக் : மியான்மர் மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பெரும் உயிர்ச் சேதம் ஏற்பட்டது. இந்நிலையில் நிலநடுக்கத்தால்…
சென்னை : தமிழ்நாட்டில் இன்னும் ஒரு வருடத்தில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளது. அதற்குள் தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் யாராக இருப்பார்கள்…