திமுக கட்சி அல்ல கம்பெனி..!அதிமுகவில் ஸ்டாலினால் ஒரு தொண்டனையாவது இழுக்க முடிந்ததா?முதலமைச்சர் பழனிச்சாமி கேள்வி
திமுக கட்சி அல்ல, அது ஒரு கம்பெனி என்று முதலமைச்சர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
சேலத்தில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் பழனிச்சாமி பேசுகையில்,திமுக ஆட்சிக்காலத்தில் கடுமையான மின்வெட்டு இருந்ததுதற்போது தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.அதிமுக ஆட்சியில் சட்டவிதிகளின்படி டெண்டர்கள் விடப்படுகின்றது.வேண்டுமென்றே திட்டமிட்டு ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி ஆட்சிக்கு களங்கம் ஏற்படுத்துகின்றனர். பூதக்கண்ணாடியை வைத்து பார்த்தாலும் அதிமுக ஆட்சியில் ஊழலை காண முடியாது.மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பது மட்டுமே எங்கள் நோக்கம் .அதிமுகவை உடைக்க முயன்ற ஸ்டாலினால் ஒரு தொண்டனையாவது இழுக்க முடிந்ததா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.மேலும் உழைக்கப் பிறந்தவர்கள் அதிமுகவினர். மற்றவர்கள் உழைப்பில் வாழ்பவர்கள் அல்ல.
உழைப்பால் படிப்படியாக உயர்ந்து முதல்வர் பதவியில் இருக்கிறேன். எப்போதும் முதலமைச்சர் கனவில் உள்ளவர் ஸ்டாலின்; அவர் எப்போதும் கனவு மட்டுமே காண முடியும்.திமுக கட்சி அல்ல, அது ஒரு கம்பெனி. அதிமுக ஜனநாயக கட்சி.அதிமுகவில் கட்சிக்காக யார் உழைத்தாலும் உயர் பதவிக்கு வர முடியும்.இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டபோது கருணாநிதி உண்ணாவிரத நாடகத்தை நடத்தினார். இலங்கையில் வசிக்கும் ஈழத்தமிழர்களின் துயரங்களை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும். திமுக, காங்கிரஸை போர்க்குற்றவாளிகளாக சர்வதேச நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட வேண்டும் என்று முதலமைச்சர் பழனிச்சாமி பேசியுள்ளார்.