வேலூர் பாஜக நிர்வாகி கொலை : திமுக ஊராட்சி மன்றத் தலைவர் பாலா சேட் கைது! 

வேலூர் மாவட்ட பாஜக நிர்வாகி விட்டல்குமார் கைது வழக்கில் திமுக ஊராட்சி மன்ற தலைவர் பாலா சேட் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Vittalkumar murder case - Bala Sait and Dharani kumar arrested

வேலூர் : கடந்த டிசம்பர் 16ஆம் தேதி கே.வி.குப்பம் அருகே சாலை விபத்தில் சிக்கியது போல மர்மமான முறையில் படுகாயமுற்று இருந்த வேலூர் மாவட்ட ஆலய மேம்பாட்டு பிரிவு நிர்வாகி விட்டல்குமார் வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

விட்டல்குமார் உயிரிழப்பு கொலை என்றும் இதற்கு வேலூர் மாவட்டம் நாகல் கிராம ஊராட்சி மன்றத் தலைவர் பாலா சேட் என்பவர் தான் காரணம் என்றும் பாஜகவினர் வேலூர் அரசு மருத்துவமனையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த மர்ம மரணம் கொலை வழக்காக மாற்றப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்ட பின்னர், நேற்று (டிசம்பர் 20) வேலூர் காட்பாடி நீதிமன்றத்தில் 2 பேர் இக்கொலை வழக்கில் சரணடைந்துள்ளனர்.

நேற்று நீதிமன்றத்தில் சரணடைந்த சந்தோஷ் மற்றும் கமலதாசன் ஆகிய இருவரும் திமுக ஊராட்சி மன்ற தலைவர் பாலா சேட் மகன் தரணிகுமாரிடம் வேலை செய்பவர்கள் என கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து விசாரணையை தீவிரப்படுத்திய கே.வி.குப்பம் போலீசார், இன்று இக்கொலை வழக்கில் திமுக ஊராட்சி மன்ற தலைவர் பாலா சேட் மற்றும் அவரது மகன் தரணிகுமார் ஆகியோரை கைது செய்துள்ளனர்.

ஏற்கனவே கைதான சந்தோஷ் மற்றும் கமலதாசன் ஆகியோரை காட்பாடி நீதிபதி ஜெய கணேஷ், ஜனவரி 2ஆம் தேதி வரை 14 நாட்கள் நீதிமன்றகாவல் விதித்து உத்தரவிட்டிருந்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்