திமுக எம்எல்ஏ மகன் ஜாமின் மனு – பணிப்பெண் பதிலளிக்க உத்தரவு..!
உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த 12-ம் வகுப்பு படித்த இளம்பெண் ஒருவர் குடும்பச் சூழல் காரணமாக அவரது பெற்றோர் சென்னையை அடுத்த பல்லாவரம் தொகுதி திமுக எம்எல்ஏவான இ.கருணாநிதியின் மகன் ஆண்ட்ரோ மதிவாணன் வீட்டில், வீட்டு வேலை செய்ய அனுப்பி வைத்துள்ளனர்.
திருவான்மியூர், 7-வது அவென்யூவில் வசித்து வந்த ஆண்ட்ரோவும், அவரது மனைவி மெர்லினாவும் அந்த இளம்பெண்ணை அதிகளவில் கொடுமைப்படுத்தியதாகவும், அவரது கை, கன்னம், முதுகு உட்பட பல்வேறு இடங்களில் சூடு வைத்து சித்ரவதை செய்ததாகவும் கூறப்படுகிறது.மேலும், பேசியபடி சம்பளத்தை கொடுக்கவில்லை பாதிக்கப்பட்ட பெண் குற்றம்சாட்டினார்.
எம்ஜிஆர் பற்றி அவதூறு.! ஆ.ராசாவுக்கு எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்.!
இது தொடர்பாக காவல் நிலையத்தில் இளம்பெண் கூறிய புகாரின் பேரில் இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில் தலைமறைவாக இருந்த ஆன்டோ மதிவாணன் மற்றும் மெர்லினாவை அண்மையில் நீ்லாங்கரை அனைத்து மகளிர் போலீஸார் ஆந்திராவில் கைது செய்தனர். இருவரும் வரும் பிப்ரவரி 9-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், ஜாமீன் கோரி இருவரும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இன்று இந்த வழக்கு ஜாமின் மனு விசாணைக்கு வந்தது. அப்போது திமுக எம்எல்ஏவின் மகன், மருமகள் ஜாமின் கோரிய வழக்கில் பாதிக்கப்பட்ட பெண், காவல்துறை பதில் அளிக்க உத்தரவு பிறப்பித்து வழக்கு விசாரணையை வரும் பிப்ரவரி 2-ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.