திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மீது வழக்கு பதிவு.!

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மீது சென்னை தேனாம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதாவது கடந்த பிப்ரவரி 15ம் தேதி திமுக இளைஞரணி சார்பாக அன்பகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ஆர்.எஸ்.பாரதி, திமுகவின் சாதனைகளை பட்டியலிட்ட ஆர்.எஸ்.பாரதி திமுகவினால் தான் தலித் மக்கள் உயர் பதவிகளுக்கு சென்றுள்ளனர் என்றும் நீதிபதிகளாகவும், அரசு உயர்பதவிகளுக்கும் தலித் மக்கள் சென்றது என பேசினார். பின்னர் இவரது பேச்சு சர்ச்சையை கிளப்பியது.
இந்த நிலையில் ஆர்.எஸ்.பாரதி மீது சென்னை தேனாம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். நீதிபதிகள் மற்றும் பட்டியல் இன மக்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக வந்த புகார்களை தொடர்ந்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை சட்டத்தின் கீழ் இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025