எடப்பாடி பழனிச்சாமி வடிகட்டிய பொய் கூறுகிறார்.! ஆர்.எஸ்.பாரதி கடும் தாக்கு.!

RSBharathi DMK

எடப்பாடி பழனிச்சாமி கூறிய கருத்துக்கள் பொய்யானவை என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார். 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட கண்டன வீடியோ குறித்து இன்று அதே போல வீடியோ மூலம் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தனது கண்டனங்களை பதிவு செய்தார். அதில் தன் மீது போட்ட வழக்கை திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி திரும்ப பெற்று விட்டார் என கூறியிருந்தார். மேலும் பல்வேறு கண்டனங்களாயும் பதிவு செய்தார்.

இபிஸ்-க்கு தகுதியில்லை :

இபிஎஸ் கூறிய இந்த கண்டன வீடியோ குறித்து, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இன்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் கொடுத்தார். அதில், தன்மீதான குற்றச்சாட்டுக்கு பதில் சொல்ல இயலாத இபிஎஸ்,  அமலாக்கத்துறை அதிகாரி போல பேசுகிறார். அப்படி பேசுவதற்கு அவருக்கு தகுதியில்லை.

செந்தில் பாலாஜி – இதய நோயாளி :

செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை செய்து கொண்டு இருக்கும் போதே, அவரது நிலைகுறித்து அறிந்து வருமாறு முதல்வர் கூறினார். அதன் பெயரில் நான் பிற்பகலில் சென்றேன். காரணம் அவர் ஒரு இதய நோயாளி. ரெயிடை பற்றி நாங்கள் கவலை கொள்ளவில்லை. ஆனால் அவரது உடல்நிலை குறித்து அறிய நாங்கள் முற்பட்டோம். நாங்கள் நினைத்து போலவே அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு விட்டது என தெரிவித்தார்.

ஒன்றரை கோடிக்கு இட்லி, தோசை :

இந்த சோதனை கைது குறித்து பாஜகவை குற்றம் சாட்டிய ஆர்.எஸ்.பாரதி, உத்திர பிரதேசத்திலேயே திமுக கூறிய வாக்குறுதிகளை கூறி தான் பாஜக வாக்கு சேகரித்தார்கள். அப்படி ஒரு முன்னோடி கட்சியாக திமுக இருக்கிறது. தொண்டனுக்கு ஒரு பிரச்சனை என்றால் ஓடி சென்று பார்ப்பவர் தான் முதலவர் மு.க.ஸ்டாலின். நீங்கள் (அதிமுக) ஜெயலலிதா உடல் நலமின்றி இருக்கும் போது ஒன்றரை கோடிக்கு இட்லி, தோசை சாப்பிட்டார்கள்.

வடிகட்டிய பொய்  :

மேலும், நான் இபிஎஸ் மீதான வழக்கை நான் வாபஸ் பெற்று கொண்டேன் என வடிகட்டிய பொய்யை கூறியுள்ளார் இபிஎஸ். ஜெயலலிதா மீது டான்சி வழக்கு போட்டது நான்தான். அந்த வழக்குக்கு தடை கேட்டு உச்சநீதிமன்றம் வரை சென்றார்கள். டான்சி வழக்கில் தண்டனை பெற்றதால் ஓபிஎஸ் முதல்வரானார்.  பிற்காடு சென்னை உயர்நீதிமன்றதில் மேல்முறையீடு செய்து தண்டனை ரத்தானது.

டான்சி வழக்கு :

ஆட்சி மற்றம் ஏற்பட்டு, கலைஞர் ஆட்சி பொறுப்பேற்றவுடன் அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு பதியப்பட்டது.  ஒரே குற்றத்திற்காக 2 வழக்கு போட கூடாது என உச்சநீதிமன்றம் கூறியதால் நான் வழக்கு வாபஸ் பெற்றேன் ஆனாலும் நிபந்தநடையோடு வாபஸ் பெற்றதால், நான் மீண்டும் அப்பீல் செய்து பின்னர் டான்சி நிலங்களை திருப்பி தருவதாக ஜெயலலிதா ஒப்புக்கொண்டார்.

உச்சநீதிமன்ற உத்தரவு :

அதே போல போல தான், டெண்டர் முறைகேட்டில் 4000 ஆயிரம் கோடி ஊழல் நடைபெற்றது. திமுக சார்பில் நான் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தேன். அந்த வழக்கு விசாரிக்கப்பட்டு, வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. உச்சநீதிமன்றம் வரை சென்று எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக மாநில காவல் துறை விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

திமுக தோற்றதில்லை :

இவரே அப்போது முதல்வர், இவர் கட்டுப்பாட்டில் காவல் துறை உள்ளது. அப்போது விசாரித்தால் விசாரணை சரியாக இருக்காது என உச்சநீதிமன்றத்தில் முறையிட்டேன். தற்போது, ஆட்சி மாற்றம் நடைபெற்றதால் தான், மாநில காவல்துறையே விசாரிக்கட்டும் என கூறி எனது மனுவை வாபஸ் பெற்றேன் என விளக்கம் கொடுத்தார். நான் பயந்து வாபஸ் பெற்று கொண்டதாக கூறியிருக்கிறார். நாங்கள் போட்ட வழக்கில் எல்லாம் ஜெயலலிதா முதல் பலருக்கும் தண்டனை வாங்கி கொடுத்துள்ளோம் எனவும், அதித்து வேலுமணி மீது விசாரணை ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. அடுத்ததாக தங்கமணி மீது விசாரணை தொடங்கும் என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியிருந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்