புதிய வரைவு தேசிய கல்விக் கொள்கையை ஆராய்ந்திட திமுக சார்பில் ஆய்வுக் குழு அமைப்பு
புதிய கல்விக் கொள்கை தொடர்பாக வரும் 25ம் தேதி வரை கருத்துகளை அனுப்பலாம் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சகம் புதிய கல்வி வரைவு கொள்கையை வெளியிட்டது.இதில் புதிய கல்விக்கொள்கை வரைவு கொள்கையில் இந்தி பேசாத மாநில பள்ளிகளில் இந்தியை பயிற்றுவிக்க பரிந்துரை செய்தது.
இந்தி பேசாத மாநில பள்ளிகளில் இந்தியை பயிற்றுவிக்க பரிந்துரை செய்யப்பட்டதற்கு தமிழகத்தில் மட்டும் அல்லாது சில வட மாநிலங்களிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதனால் இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தியை பயிற்றுவிப்பது கட்டாயம் என்ற பரிந்துரையை நீக்கம் செய்தது மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சகம் .
புதிய வரைவு #NewEducationPolicy பற்றி கல்வி வல்லுனர்களின் கருத்தினை அறிய தி.மு.க. சார்பில் “ஆய்வுக் குழு” அமைக்கப்படுகிறது.
குழுவின் அறிக்கையின் அடிப்படையில் திமுகவின் கருத்து மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திடம் வழங்கப்படும்.
தமிழ் உரிமையைக் காத்திட திமுக எந்நாளும் போராடும் pic.twitter.com/N5ydc0c1ay
— M.K.Stalin (@mkstalin) July 14, 2019
இந்த நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அவர் வெளியிட்ட அறிவிப்பில், புதிய வரைவு தேசிய கல்விக் கொள்கையை ஆராய்ந்திட திமுக சார்பில் ஆய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது .முன்னாள் அமைச்சர் பொன்முடி, முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, டாக்டர் ரவீந்திரநாத் உட்பட 8 பேரை ஆய்வுக்குழுவில் நியமித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.