கருணாநிதி நூற்றாண்டு விழா தொடர்பாக திமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் திமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழா தொடர்பாக திமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன், திமுக எம்பிக்கள் கனிமொழி, திருச்சி சிவா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். மறைந்த முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான கலைஞரின் 100-வது பிறந்தநாள் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இதன்பின் அன்று மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தலைவர்கள் பங்கேற்கும் கலைஞர் நூற்றாண்டு விழா பிரமாண்ட பொதுக்கூட்டம் சென்னையில் நடைபெற இருந்தது.
ஆனால், ஒடிசா ரயில் விபத்தை தொடர்ந்து இந்த பொதுக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், ஒத்திவைக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் 7-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. கருணாநிதியின் 100-வது பிறந்த நாள் என்பதால் ஆண்டு முழுவதும் நூற்றாண்டு விழாவாக கொண்டாட ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், திமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
இஸ்ரேல் : வடக்கு இஸ்ரேலிய நகரமான சிசேரியாவில் உள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வீட்டிற்கு வெளியே பிளாஷ் வெடிகுண்டுகள்…