பாலியல் ரீதியாக துன்புறுத்திய திமுக நிர்வாகிகள் – முதல்வருக்கு இபிஎஸ் கண்டனம்!
விடியா ஆட்சியில் சாமானிய பெண்களின் பாதுகாப்பு கேள்வி குறி ஆகியிருப்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது என இபிஸ் கண்டனம்.
திமுகவின் பொது கூட்டத்தில் பெண் காவலர்களை பாலியல் ரீதியாக திமுக நிர்வாகிகள் துன்புறுத்தியதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றசாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவரது பதிவில், திமுகவின் பொது கூட்டத்தில் பெண் காவலர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய திமுக நிர்வாகிகள், பாதுகாப்பு தருபவர்களையே தன் கட்சியினரிடம் இருந்து பாதுகாக்க முடியாத, காவல்துறையின் பொறுப்பாளராக இருக்ககூடிய இந்த கையாளாகாத முதல்வருக்கு எனது கடுமையான கண்டனங்கள் என கூறியுள்ளார்.
மேலும், இது போன்ற தொடர் சம்பவங்கள், இவரது விடியா ஆட்சியில் சாமானிய பெண்களின் பாதுகாப்பு கேள்வி குறி ஆகியிருப்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. நம்மைக் காக்கும் பெண்களை நாமே காக்க வேண்டிய சூழ்நிலை, உடனடியாக குற்றவாளிகளை கைது செய்து, கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.