மீட்பு பணிகளில் திமுக அரசியல் பார்க்கவில்லை…! திமுக பொருளாளர் துரைமுருகன்
மீட்பு பணிகளில் திமுக அரசியல் பார்க்கவில்லை என்று திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கஜா புயல் டெல்டா மாவட்டங்களை ஒரு வழி செய்தது.குறிப்பாக இயற்கை வளங்கள் செழிப்பாக உள்ள மாவட்டங்கள் சிதைந்து கிடக்கிறது.தஞ்சை, நாகை, திருவாரூர்,புதுக்கோட்டை மாவட்டங்களில் சேதங்கள் பல ஆகும்.
இந்நிலையில் திமுக தலைமைக் கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு திமுக அறக்கட்டளை சார்பில் ரூ. 1 கோடி நிதி வழங்கப்படும்.அதேபோல் நிவாரண நிதியாக திமுக எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களின் 1 மாத ஊதியமும் அளிக்கப்படும் என்றும் தலைமைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டது.
இதனால் திமுக பொருளாளர் துரைமுருகன் சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்தார்.திமுக சார்பில் அறிவிக்கப்பட்ட ரூ.1 கோடி நிவாரணத்தை முதலமைச்சரிடம் வழங்கினார் திமுக பொருளாளர் துரைமுருகன்.
அதன் பின்னர் அவர் கூறுகையில், மீட்பு பணிகளில் திமுக அரசியல் பார்க்கவில்லை, அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டு வருகிறோம் .மத்திய அரசிடம் கேட்கின்ற விதத்தில் அதிகாரமுடன், தைரியமாக கேட்டால் தான் கேட்ட நிதியை பெற முடியும் என்றும் திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.