ஜெயலலிதா மரணத்திற்கு திமுக காரணம் இல்லை – ஸ்டாலின்
ஜெயலலிதா மரணத்திற்கு திமுக காரணம் இல்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
விக்கிரவாண்டி ஈச்சங்குப்பத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.அப்பொழுது அவர் பேசுகையில், ஜெயலலிதா மரணத்திற்கு திமுக காரணம் இல்லை. ஜெயலலிதா மீது நாங்கள் வழக்கு போடவில்லை.சுப்பிரமணிய சாமிதான், ஜெயலலிதா மீது வழக்கு போட்டார்.
உள்ளாட்சி தேர்தல் நடத்தினால் தோற்றுவிடுவோம் என்ற பயத்தில் ஆளுங்கட்சி உள்ளாட்சி தேர்தலை நடத்தவில்லை.அதிமுக தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வை ரத்து செய்வோம் என உறுதியளித்தனர், ஆனால் அது நிறைவேற்றப்படவில்லை என்று தெரிவித்தார்.