டெல்லியில் திமுக எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்!
நாடாளுமன்ற வளாகத்தில் இன்று மத்திய அரசை கண்டித்து கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக சமீபத்தில் அறிவித்திருந்தது. அதன்படி, நாடாளுமன்ற வளாகத்தில் இன்று மத்திய அரசை கண்டித்து தமிழ்நாட்டைச் சேர்ந்த திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்காதது மற்றும் வெள்ள நிவாரணம் வழங்காததை கண்டித்து, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு திமுக எம்.பி.க்கள் மற்றும் தோழமை காட்சிகள் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திமுகவின் பொருளாளரும், நாடாளுமன்ற குழு தலைவருமான டிஆர் பாலு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
செந்தில் பாலாஜியின் பூர்வீக வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை.!
இதில், திமுக எம்பிக்கள் ஆ.ராசா, கனிமொழி, விசிக தலைவர் தொல் திருமாவளவன், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்பிக்கள் மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட், மார்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் எம்பிக்கள் பங்கேற்றுள்ளனர். வீழ்த்துவோம் வீழ்த்துவோம் அடக்குமுறையை வீழ்த்துவோம் என பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளனர்.
தமிழ்நாடு அரசு வெள்ள நிவாரண நிதி ரூ.37,000 கோடி கேட்ட நிலையில், மத்திய அரசு ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை என குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். மேலும், தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு முறையாக நிதி வழங்குவதில்லை என்று கூறி நெல்லையில் திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் போராட்டம் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.