நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 31ம் தேதி குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. இதன்பின், பிப்.1ம் தேதி நாடாளுமன்ற மக்களவையில் மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளை வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடரில், ஜார்கண்ட் முதல்வர் விவகாரம், சண்டிகர் மேயர் தேர்தல் மற்றும் பட்ஜெட் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.
இதற்கிடையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை முன்பு திமுக எம்பிக்கள் கருப்பு சட்டை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என ஏற்கனவே நாடாளுமன்ற திமுக குழு தலைவர் டி.ஆர். பாலு அறிவித்து இருந்தார்.
முன்னாள், இன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான வழக்கு… இன்று விசாரணை..!
இந்நிலையில், திமுக எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அண்ணல் காந்தியடிகள் சிலைக்கு முன்னால் கருப்பு சட்டை அணிந்து நடத்தவுள்ளனர். தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்டங்களுக்கு உரிய நிதியை ஒதுக்கவில்லை எனவும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை, தமிழ்நாடு ஆளுநர் விவகாரம், சென்னை மெட்ரோ ரயில் சேவை விரிவாக்கம் உள்ளிட்டவைகளை வலியுத்தி மத்திய அரசை கண்டித்து திமுக போராட்டம் நடத்துகிறது.
சென்னை: விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் செப்டிக் டேங்கில் விழுந்து, லியா லட்சுமி என்ற 5 வயது குழந்தை உயிரிழந்தது. செப்டிக் டேங்கின்…
சென்னை: பொங்கல் திருநாளையொட்டி சொந்த ஊருக்கு செல்லும் மக்களுக்காக திருச்சி -தாம்பரம் - திருச்சி இடையே ஜன் சதாப்தி சிறப்பு…
புதுச்சேரி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் பொங்கல் தொகுப்பிற்கு பதிலாக, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ. 750 வங்கி கணக்கில்…
கோவா: நடிகை சாக்ஷி அகர்வால் தனது சிறுவயது நண்பரான நவனீத் மிஸ்ராவை காதலித்து திருமணம் செய்திருக்கிறார். அவர்களின் திருமணம் நேற்று…
தெலுங்கானா: ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் கடந்த டிச,4-ம் தேதி அன்று ‘புஷ்பா 2’ படத்தின் சிறப்பு காட்சி திரையிடலை…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி ஒரு ஆண்டு நிறைவையெட்டி தமிழக முழுவதும் மக்கள் நலப்பணிகளை தீவிரப்படுத்தி தவெக…