முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக எம்பிக்கள் கூட்டம்!

சென்னை:தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தலைமையில் திமுக எம்பிக்கள் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.
திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம்,சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில்,தமிழக முதல்வரும்,திமுக தலைவருமான ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில் திமுக மக்களவை,மாநிலங்களவை எம்பிக்கள் பங்கேற்ற உள்ளனர்.நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இந்த மாதம் இறுதியில் தொடங்க உள்ள நிலையில்,திமுக சார்பில் மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் குறித்து இன்று நடைபெறும் கூட்டத்தில் ஆலோசிக்கப் படவுள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பாக,3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற உடனடி மசோதா, தமிழகத்தில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு அதிக நிதி உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை நாடாளுமன்றத்தில் திமுக சார்பில் வலியுறுத்துவது தொடர்பாக,இக்கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
உச்சநீதிமன்ற அதிகாரம் குறித்து கேள்வி எழுப்பிய குடியரசுத் தலைவர்.., முதல்வர் ஸ்டாலின் கண்டனம்.!
May 15, 2025
இந்தியா பயப்படாது…அத்துமீறினால் பாகிஸ்தானுக்கு பதிலடி தான்” அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு!
May 15, 2025