திமுக எம்.பி.கனிமொழி வீட்டில் போடப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பு வாபஸ்!

திமுக எம்.பி.கனிமொழி வீட்டில் போடப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பு வாபஸ்.
சென்னை சிஐடி காலனியில் உள்ள, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழி வீட்டில், தினமும் ஒரு ஏட்டு தலைமையில், 4 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளத்தில், தந்தை, மகன் இருவரும் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட போது உயிரிழந்துள்ளனர்.
இதனையடுத்து எம்.பி.கனிமொழி, காவல்துறை டிஜிபி-யிடம், இவர்கள் இருவரும் காவல்துறை தாக்கியதில் உயிரிழந்திருக்க கூடும் என்ற சந்தேகத்தில் புகார் மனு அளித்திருந்தார். இந்நிலையில், கனிமொழி வீட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் இரவோடு இரவாக திரும்ப பெறப்பட்டன.
இதுகுறித்து காவல்துறை தரப்பில், கனிமொழிக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லாததாலும், கொரோனா காலத்தில் காவல்துறையினரின் தேவை அதிகமாக இருப்பதாலும் போலீஸ் பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டதாக கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
AFG vs ENG: கடைசி வரை போராடிய இங்கிலாந்து… கடைசியில் திரில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான்
February 26, 2025
ஈஷாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா! காலை 6 மணி வரை தியானம்!
February 26, 2025
மத கஜ ராஜா வசூலை மொத்தமாக எரித்த டிராகன்! 5 நாட்களில் இவ்வளவு வசூலா?
February 26, 2025