நீட் தேர்வை ரத்து செய்வது தொடர்பாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை நேரில் சந்தித்த திமுக எம்.பி. டி.கே.எஸ். இளங்கோவன்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நீட் தேர்வு ரத்து செய்வது குறித்து எழுதிய கடிதம், நீதியரசர் ஏ.கே.ராஜன் பரிந்துரையை கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து திமுக எம்.பி டி.கே.எஸ் இளங்கோவன் அவர்கள் வழங்கினார்.
நீட் தேர்வு தொடர்பாக மேற்கு வங்கம்,கேரளா உள்ளிட்ட 12 மாநில முதல்வர்களின் ஆதரவைக் கேட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், தமிழ்நாடு அரசு இதுவரை எடுத்துள்ள முயற்சிகள் குறித்து விளக்கி, மாண்புமிகு நீதியரசர் திரு. ஏ.கே. இராஜன் குழுவின் அறிக்கையின் மொழிபெயர்ப்பு நகலை பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்களுக்கு, திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு நேரில் சென்று வழங்கி இப்பிரச்சினை குறித்து தமிழ்நாட்டின் நிலைப்பாட்டிற்கு அந்தந்த மாநில அரசுகளின் ஆதரவைக் கோர வேண்டுமென்றும் அறிவுறுத்தி இருந்தார்.
அதன்படி, முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நீட் தேர்வு ரத்து செய்வது குறித்து எழுதிய கடிதம், நீதியரசர் ஏ.கே.ராஜன் பரிந்துரையை கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து திமுக எம்.பி டி.கே.எஸ் இளங்கோவன் அவர்கள் வழங்கினார்.