இடஒதுக்கீடு ரத்து.! பாஜகவின் தோல்விக்கு இதுவே காரணம்.! திமுக எம்.பி திருச்சி சிவா பேச்சு.!

இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீடை ரத்து செய்து தான் கர்நாடகா தேர்தலில் பாஜக தோற்றத்திற்கு முக்கிய காரணம் என திமுக எம்பி திருச்சி சிவா கூறியுள்ளார் .
கர்நாடக தேர்தலில் கடந்த முறை ஆட்சியில் இருந்த பாஜக அரசு நடப்பு தேர்தலில் பெரும் தோல்வியை சந்தித்துள்ளது. காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றி உள்ளது. கர்நாடக தேர்தல் குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
திமுக மாநிலங்களவை எம்பி திருச்சி சிவா நேற்று ஒரு பொதுக்கூட்டத்தில் பேசுகையில், பாஜக அரசு பற்றி கடுமையாக விமர்சித்து இருந்தார். அவர் கூறுகையில், பாஜக அரசானது, மதவாதங்களை வைத்து மக்களை பிரித்து ஆட்சி செய்ய நினைக்கிறதுஎன்றும் , இஸ்லாமியர்களுக்கு எதிராக, மாநில சுயஆட்சிக்கு எதிராக, கூட்டாட்சிக்கு எதிராக செயல்படுகிறது என குற்றம் சாட்டினார்.
மேலும், கர்நாடகாவில் இஸ்லாமியர்களுக்கு தனி இடஒதுக்கீடு இருந்தது எனவும், அதனை நீக்கியியதே கர்நாடக தேர்தலில் பாஜக ஆட்சியை இழக்க முக்கிய காரணம் எனவும் திருச்சி சிவா குற்றம் சாட்டினார்.