எல்லாத்துக்கும் ஒரு முறை இருக்கிறது.! திமுக எம்பி திருச்சி சிவா கடும் விமர்சனம்.!

Default Image

எல்லாவற்றிர்க்கும் ஒரு முறை உள்ளது. ராகுல்காந்தி சஸ்பெண்ட் செய்யப்பட்டது ஆரோக்கியமானது அல்ல. – திமுக எம்பி திருச்சி சிவா பேட்டி. 

காங்கிரஸ் எம்.பியாக இருந்த ராகுல்காந்தி அந்த பதவியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்ட்டதற்கு நாடு முழுவதும் பல்வேறு கட்சியினர் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

அவசரகதி நடவடிக்கை :

இந்த சஸ்பெண்ட் நடவடிக்கை குறித்து திமுக எம்பி திருச்சி சிவா செய்தியாளர்களிடம் பேசுகையில்,  இந்த சஸ்பெண்ட் நடவடிக்கையானது இந்திய ஜனநாயகத்திற்கு ஏற்பட்ட பின்னடைவு. என்றும், ஒரு அவதூறு வழக்கை 4 ஆண்டுகள் இழுத்தடித்து அதன் பிறகு தண்டனை கொடுத்த மறுநாளே அவசரகால கெதியில் சஸ்பெண்ட் செய்ய என்ன காரணம் என கேள்வி எழுப்பினார்.

ஆளும் கட்சியினர் அமளி  :

மேலும் , நாடாளுமன்ற நிகழ்வு பற்றி திருச்சி சிவா பேசுகையில், பொதுவாக எதிர்க்கட்சிகள் தான் அமலில் ஈடுபடும் என்ற கருத்து நிலவும். ஆனால் உண்மை அது இல்லை. இந்த முறை இத்தனை நாள் நாடாளுமன்ற நிகழ்வு தடைப்பட்டதற்கு காரணம் ஆளும்கட்சி தான். அவர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு அவை நடைபெறாமல் பார்த்துக்கொள்கிறார்கள். என குறிப்பிட்டார்.

அடுத்ததாக, பாஜக அரசு மற்ற துறைகள் வாயிலாக எதிர்கட்சிகளை பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. என்றும் தனது விமர்சனங்களை திருச்சி சிவா முன்வைத்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்