மூழ்கும் கப்பலாக இருக்கும் பாஜக தமிழகத்தில் ஒரு சீட் கூட வெல்ல முடியாது என திமுக எம்பி டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.
நேற்று மத்திய அமைச்சர் அமித்ஷா தமிழகத்திற்கு பயணம் மேற்கொண்டார். காலையில் சென்னை கேளம்பாக்கத்தில் கட்சி நிர்வாகிகளுடன் 2024 தேர்தல் குறித்த ஆலோசனையில் ஈடுபட்டார். அதன் பிறகு, வேலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது திமுக – காங்கிரஸ் பற்றி பல்வேறு விமர்சனங்களை முன் வைத்தார். மேலும் வரும் தேர்தலில் தமிழகத்தில் 25 இடங்களை கைப்பற்ற வேண்டும் என்றும். மத்தியில் பாஜக 300 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றி மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் எனவும் கூறிய அமித்ஷா திமுகவுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பி இருந்தது.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக திமுக எம்பி டி.ஆர்.பாலு அறிக்கை வெளியிட்டுள்ளார்.அதில் , தமிழகத்திக்கு பல திட்டங்களை பாஜக அள்ளி வீசியது போல அமித்ஷா பேசியிருக்கிறார். மாநில அரசுகளுக்கு நிதியை ஒதுக்க வேண்டியது மத்திய அரசின் கடமை. தேசிய நெடுஞ்சாலைதுறையில் தமிழகத்தை வஞ்சித்தது பாஜக. கடந்த 9 ஆண்டுகளில் தமிழகத்திற்கு சுமார் 2 லட்சம் கோடிக்கும் அதிகமாக நிதி ஒதுக்கிய மத்திய அரசு, உத்திர பிரதேசத்திற்கு 10 லட்சத்து 73 ஆயிரம் கோடியை ஒதுக்கியுள்ளது என குற்றம் சாட்டினார்.
சிஆர்பிஎப்பணிகளுக்கான தேர்வை தமிழில் எழுத வைத்து இருப்பதாக அமித்ஷா கூறியுள்ளார். அதற்கு கோரிக்கை வைத்ததே தமிழக முதல்வர் தான் என பேசியிருந்தார். ஊழலே செய்யாத ஆட்சியில் ஏன் அதானி பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்கவில்லை என்றும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மூழ்கும் கப்பலாக இருக்கும் பாஜகவுக்கு தமிழகத்தில் ஒரு எம்பி சீட் கூட கிடைக்காது எனவும் அமித்ஷாவுக்கு பதில் கொடுத்துள்ளார் திமுக எம்பி டி.ஆர்.பாலு.
துபாய் : நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டுள்ளவர். தற்போது துபாயில்…
சென்னை : இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட…
சென்னை : இந்த வருடத்தின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இந்த வாரம் திங்கள் அன்று தொடங்கி இன்றுடன் நிறைவு பெற்றது.…
துபாய் : நடிகர் அஜித்குமார் சினிமாவை தாண்டி ரேஸிங்கில் அதீத ஆர்வம் கொண்டவர். 2000த்தின் தொடக்கத்தில் ரேஸிங்கில் கலந்து கொண்ட…
குஜராத் : நேற்று (ஜனவரி 10) குஜராத் மாநிலம் அகமதாபாத் தனியார் பள்ளியில் எடுக்கப்பட்ட ஒரு சிசிடிவி காட்சிகள் காண்போரை…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…