மகளிர் உரிமை தொகைத் தொகை பறிபோகும்… கனிமொழி எம்.பி பரபரப்பு பேச்சு.!

DMK MP Kanimozhi

கடந்த 2023 செப்டம்பர் மாதம் முதல் தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல்பாட்டில் இருந்து வருகிறது. இதன் மூலம் தகுதி வாய்ந்த 1.5 கோடிக்கு அதிகமான மகளிருக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.

இந்த திட்டம் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் நிறுத்தப்படும் என்று திமுக எம்பி தான் கனிமொழி நேற்று தூத்துக்குடியில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றினார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் திமுக மகளிர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்பி கனிமொழி கலந்துகொண்டு உரையாற்றினார், அப்போது அவர் பேசுகையில், மத்தியில் ஆளும் பாஜக அரசு 20,000 கோடி ரூபாய் ஜிஎஸ்டி பாக்கி தொகையை தமிழகத்திற்கு தர வேண்டி இருக்கிறது. வெள்ள நிவாரண தொகை என எதையும் தருவதில்லை. தமிழகத்திற்கு வழங்கப்படும் திட்டங்களை குறைத்துக் கொண்டே வருகின்றனர்.

ReadMore – 37 வருட உழைப்பு.. எந்த பலனும் இல்லை.! பாஜகவில் இணைந்த விஜயதாரணி பரபரப்பு பேட்டி.!

ஏற்கனவே, 100 நாள் வேலை திட்டத்திற்கு போதிய நிதியை தமிழகத்திற்கு கொடுப்பதில்லை. அந்த நிதியானது ஆண்டு தோறும் குறைந்து கொண்டே வருகிறது. மீண்டும் இதே போல் பாஜக ஆட்சிக்கு வந்தால், ஏற்கனவே நாம் கொடுக்கப்படும் மகளிர் தொகை தொகை ஆயிரம் ரூபாய் என்பது நிறுத்தப்படும் சூழல் உருவாகும் என்று தெரிவித்தார்.

மேலும், திமுக வெற்றி என்பது அனைவரையும் பாதுகாக்க கூடிய வெற்றியாகும் என்றும் கனிமொழி பேசினார். அடுத்ததாக, இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக மருத்துவ கல்லூரிகள் உள்ளது. அதனை ஒழிக்க தான் நீட் எனும் பொது தேர்வை கொண்டு வந்து, ஏழை மக்களின் மருத்துவ கனவை ஒழிக்கபார்க்கிறார்கள். புதிய கல்வி கொள்கை மூலம் அனைத்து கல்லூரிகளுக்கும் நுழைவுத் தேர்வு கொண்டு வர துடிக்கிறார்கள் என்றும் பாஜக அரசு மீது பல்வேறு குற்றசாட்டுகளை முன்வைத்து பேசினார் திமுக எம்பி கனிமொழி பேச்சு.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்