எஸ்.பி.பி உடல்நிலை குறித்து திமுக எம்.பி கனிமொழி ட்வீட்.!

Published by
கெளதம்

எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலை குறித்து திமுக எம் பி கனிமொழி தனது ட்வீட்டர் பக்கத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார்.

தமிழ் திரைப்பட பாடகர் எஸ்.பி. கடந்த வாரம் அவர் கொரோனா பரிசோதனையை  மேற்கொண்டார். அதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி சென்னை சூளைமேடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று  உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அவர் ஐசியுவிற்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சையில் பெற்று  வருகிறார்  என்று மருத்துவமனை ஒரு அறிக்கையை வெளியிட்டது.

இந்நிலையில் கொரோனா பாதித்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நிலை சீராக உள்ளது என்று மருத்துவமனை அறிக்கை இன்று வெளியிட்டுள்ளது. தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் அவர் விரைவில் குணமடைந்து மீண்டு வர திரையுலகினர் மட்டுமின்றி பலரும் தங்களது பிரார்த்தனைகளை பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் திமுக எம்.பி கனிமொழி தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், இலட்சக்கணக்கான பாடல்களின் வழியாக நம் வாழ்க்கையின் முக்கிய அங்கமாகவே மாறிவிட்ட எஸ்பிபி இன்று உடல்நலம் பாதிக்கப்பட்டு இருக்கிறார் என்பது மிகுந்த வருத்தமளிக்கிறது என்றார்.

மேலும் அதில், எந்த குரலை கேட்காது ஒருநாளைக்கூட தாண்டிப்போவது சாத்தியமில்லையோ, எந்த குரல் மக்களின் மகிழ்ச்சியையும் வலிகளையும் அன்றாடம் பகிர்ந்துகொண்டதோ, எந்த குரல் தன் பாடலின் வழி ஒரு நிகழ்கலையையே நடத்திடுமோ, அந்தக் குரலுக்கு சொந்தக்காரர் உடல்நலம் பெற்று மறுபடியும் அவரது கோடிக்கணக்கான ரசிகர்களுக்காக பாடவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Published by
கெளதம்

Recent Posts

வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கும்! வானிலை ஆய்வு மையம் அலர்ட்!

வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கும்! வானிலை ஆய்வு மையம் அலர்ட்!

சென்னை : சென்னை வானிலை ஆய்வு மையம் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், வெப்ப நிலை உயரும் எனவும் எச்சரிக்கை கொடுத்து தகவலை…

47 minutes ago

டப்பா ரோலுக்கு ஆண்டி ரோலே மேல்..சீண்டிய நடிகைக்கு சிம்ரன் கொடுத்த பதிலடி!

சென்னை : 90 ஸ் காலகட்டத்தில் கொடி கட்டி பறந்த நடிகை சிம்ரன் இப்போது ஹீரோயினாக இல்லாமல் நல்ல கதையம்சம் கொண்ட…

57 minutes ago

விலகல் முடிவில் உறுதியாக இருக்கும் துரை வைகோ…ஏற்க மறுக்கும் மதிமுக தலைமை!

சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக நேற்று அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்திருந்தார். அவர்…

3 hours ago

திமுக கூட்டணியில் பாமகவா? முதல்வர் மு.க.ஸ்டாலின் சொன்ன பதில்?

சென்னை : தமிழ்நாடு சட்டசபை தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ள நிலையில் எந்த கட்சி எந்தெந்த கட்சிகளோடு கூட்டணி வைக்கபோகிறது என்பதற்கான கேள்விகளும்…

3 hours ago

இன்னைக்கு தான் நிஜ ஐபிஎல்! சென்னைக்கு பதிலடி கொடுக்குமா மும்பை?

மும்பை : ஐபிஎல் போட்டிகள் என்றாலே சென்னை மற்றும் மும்பை போட்டி நடைபெறுகிறது என்று சொன்னாலே போதும் அதற்கென்று தனி ரசிகர்கள்…

4 hours ago

தம்பி இது தீர்வு இல்லை…தற்கொலை செய்ய முயற்சி செய்த இளைஞர்..போலீசாரின் செயல்?

கேரளா : மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பொன்னானி பகுதியில், புதிய பாலத்தின் மேல் நின்று ஒரு இளைஞர் ஆத்மஹத்யா செய்து…

4 hours ago