ஆங்கிலம், ஹிந்தியில் மட்டுமே மத்திய அரசுப்பணி தேர்வுகள்.! திமுக எம்.பி கனிமொழி கடும் கண்டனம்.!
மத்திய அரசு தேர்வாணையத்தால் நடத்தப்படும் CGL தேர்வுகள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடைபெறும் என அறிவித்தது குறித்து தனது கண்டனத்தை திமுக எம்பி கனிமொழி பதிவு செய்துள்ளார்.
மத்திய அரசு தேர்வாணையத்தால் நடத்தப்படும் CGL எனும் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்வுகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டுமே இந்த தேர்வுகள் நடத்தப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது .
இது குறித்து திமுக எம்.பி கனிமொழி டிவிட்டர் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அதில் அவர், ‘ பணியாளர் தேர்வாணையத்தால், ஒன்றிய அரசின் துறைசார் பணியிடங்களுக்கு நடத்தப்படும் CGL தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது.’ என்றும்,
மேலும், ‘ இந்திய ஒன்றியத்தின் இறையாண்மை, அதன் பன்மைத்துவத்தில் உள்ளது. மாறாக, அனைத்திலும் ஒற்றைத்துவத்தை புகுத்திட நினைப்பது ஜனநாயகப் படுகொலை.’ என தனது காட்டமான கண்டனத்தை பதிவு செய்துள்ளார் எம்.பி கனிமொழி.
I strongly oppose the Union Government’s announcement that only English and Hindi will be used in CGL examinations administered by the Staff Selection Commission for Union Government departmental positions. The Indian Union’s sovereignty is rooted in its pluralism. (1/4) https://t.co/YDQJ4WaSOO
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) October 6, 2022