திமுக மகளிரணி செயலாளரும், தூத்துக்குடி எம்.பியுமாகிய கனிமொழி இன்று மதுரையில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
திமுக மகளிரணி செயலாளரும் தூத்துக்குடி எம்பியுமான கனிமொழி இன்று மதுரை தெற்கு மாவட்ட பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். மதுரை ஆர்.டி.ராகவையார் மகாலில் அனைத்து சமுதாய சங்கங்களின் நிர்வாகிகளை காலை 9 மணிக்கு பின் சந்திக்க உள்ள கனிமொழி, 10 மணிக்கு ஜீவாநகர் செல்ல உள்ளதாகவும் அதன் பின் அப்பள தொழிற்சாலைகளில் பணி புரிய கூடிய பெண் தொழிலாளர்களுடன் உரையாட உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் டிவிஎஸ் நகர் பாலம், உழவர் சந்தை வியாபாரிகள், மாடக்குளம் கண்மாய் ஆகியவற்றை பார்வையிட்டு விவசாயிகளுடன் கலந்துரையாடவுள்ள கனிமொழி, மீன் வியாபாரம் செய்யக்கூடிய பெண்களுடனும் சந்திப்பு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. 12.10 மணிக்கு பரவை செல்லும் அவர் அங்கு மகாத்மா காந்தி மற்றும் அறிஞர் அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவிக்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் முக்கியமாக மதிய உணவு இடைவேளைக்குப் பின் மறைந்த திமுக தலைவர் கலைஞர் அவர்களுக்கு எதிர்காலத்தில் சிலை வைப்பதற்காக திமுக தேர்வு செய்து வைத்துள்ள சிம்மக்கல் ரவுண்டானா பகுதியையும் அவர் பார்வையிட உள்ளாராம். அதன் பின்பதாக கொரோனா ஒழிப்பு பணியில் சிறப்பாக பணியாற்ற கூடிய தூய்மை பணியாளர்களை சந்தித்து பேசவுள்ள அவர் 7 மணிக்கு ஜீவா நகர் சந்திப்பில் நடைபெறக்கூடிய பொதுக்கூட்டத்திலும் பங்கேற்று உரை ஆற்றவுள்ளார். தற்பொழுது தற்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று முழுவதும் மதுரை பகுதியை சுற்றி எம்பி கனிமொழி அவர்கள் பார்வையிட உள்ளார்.
நெல்லை : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான அமரன் திரைப்படம் வெளியாகி 3-வது வாரமாக பல திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. படத்திற்கு…
சென்னை : இன்று கார்த்திகை மாதம் முதல் தேதியை முன்னிட்டு சபரிமலை ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து தங்கள் விரத…
சென்னை : இளம் தமிழ் இயக்குனர் சுரேஷ் சங்கையா காலமானார். உடல் நலம் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த அவர், நேற்று (வெள்ளிக்கிழமை)…
சென்னை : தமிழகம் முழுவதும் இன்று வாக்காளர் பட்டியல் திருத்துவதற்கு சிறப்பு முகாம் நடைபெறுகிறது. நாளை ஞாயிற்றுக்கிழமையும் முகாம் நடைபெறவுள்ளது.…
சென்னை : மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
சென்னை : கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்திபெற்ற சபரிமலையில் உள்ள ஐயப்பனுக்கு உகந்த கார்த்திகை மாதம் இன்று (16.11.2024) முதல்…