தனது பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த தூத்துக்குடி எம்.பி கனிமொழி.!
தனது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆசி பெற்றார் திமுக எம்பி கனிமொழி.
தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக துணை பொதுசெயலாளருமான மு.க.கனிமொழி இன்று தனது 55வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவரது பிறந்தநாளுக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
கனிமொழி, தனது மூத்த சகோதரரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை பெற்றார். இந்த புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.