அமைச்சர் பொன்முடியின் ‘கொச்சை’ பேச்சு! “ஏற்றுக்கொள்ள முடியாது!” கனிமொழி கடும் கண்டனம்!

அமைச்சர் பொன்முடியின் சமீபத்திய பேச்சை ஏற்றுக்கொள்ள முடியாது என திமுக எம்பி கனிமொழி தனது எக்ஸ் தள பக்கத்தில் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். 

Minister Ponmudi - DMK MP Kanimozhi

சென்னை : தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் பொன்முடி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு, அவர் பேசிய பேச்சுக்கள் தற்போது பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. இதனை மாற்று கட்சியினர் தவிர்த்து சொந்த திமுக கட்சியினரே வெறுக்கும் அளவுக்கு அவரது கொச்சை பேச்சுக்கள் அமைந்துள்ளது என்று கூறப்படுகிறது.

சமீபத்திய நிகழ்வில் பேசிய அமைச்சர் பொன்முடி, விலைமாது பற்றி கதை கூறினார். அதில், சைவம் , வைணவம், உடலுறுவு பற்றி மறைமுகமாக மிகவும் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவி பெரும் விவாதத்திற்கு உள்ளாகி உள்ளது.

இந்த பேச்சுக்கள் குறித்து தனது எக்ஸ் தள பக்கத்ல கண்டனம் தெரிவித்துள்ள திமுக எம்.பி கனிமொழி, ” அமைச்சர் பொன்முடி அவர்களின் சமீபத்திய‌ பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது. எந்த காரணத்திற்காகப் பேசப் பட்டிருந்தாலும் இப்படிப்பட்ட கொச்சையான பேச்சுகள் கண்டிக்கத்தக்கது.” என தனது அதிருப்தியை சொந்த கட்சியாக இருந்தாலும் வெளிப்படையாக பதிவு செய்துள்ளார்.

அமைச்சர் பொன்முடி இவ்வாறு சர்ச்சைக்குரிய வகையில் பேசுவது இது முதல் முறையல்ல . இதற்கு முன்னர் தமிழக அரசின் விடியல் பேருந்து சேவையில் இலவசமாக செல்லும் மகளிரை குறிப்பிட்டு ஓசியில் பேருந்தில் செல்கிறீர்கள் என்று விமர்சித்து பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்