மீண்டும் தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி.. 2 அமைச்சர்கள் உட்பட மொத்தம் 51 விருப்ப மனுக்கள்…
Kanimozhi MP – மக்களவை தேர்தல நெருங்கும் வேளையில் பிரதான கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை , தொகுதி பங்கீடு என நிறைவு செய்து வேட்பாளரை அறிவிக்கும் கட்டத்தை நெருங்கி வருகின்றன. ஏற்கனவே பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்து விட்டது. காங்கிரஸ் மாநிலங்களில் கூட்டணி பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
Read More – SBI வங்கி செயல் கேவலமானது.! விளாசிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.!
திமுக, அதிமுக சார்பில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. திமுக தலைமை அலுவலகத்தில் மக்களவை தொகுதியில் போட்டியிடுபவர்கள் தங்கள் விருப்ப மனுக்களை அளித்து வருகின்றனர். மேலும் பலர் தங்கள் விருப்பமானவர்களை தொகுதி சார்பாக முன்மொழிந்து வருகின்றனர்.
Read More – ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவம்… தமிழகத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிரடி சோதனை!
இதில் கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கனிமொழி மீண்டும் அதே தூத்துக்குடியில் போட்டியிட விருப்ப மனுவை அளித்தார்.
Read More – பிரதமர் மோடியை சந்தித்தது ஏன்? அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்
திமுக அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன் உட்பட 70க்கும் மேற்பட்டோர் கனிமொழி மீண்டும் தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட வேண்டும் என விருப்ப மனுவை அளித்துள்ளனர்.