இளையராஜாவின் மகளும், பிரபல பாடகியுமான பவதாரிணி நேற்று ஜனவரி 25-ஆம் தேதி காலமானார். இவருடைய மறைவு திரைத்துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவருடைய மறைவுக்கு சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
குறிப்பாக வடிவேலு, சிம்பு, இயக்குனர் பாரதி ராஜா, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், நடிகர் கவின், கமல்ஹாசன், உள்ளிட்ட பிரபலங்கள் தங்களுடைய இரங்கலை தெரிவித்து இருந்தார்கள். அந்த வகையில், திமுக எம்பி கனிமொழி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் இரங்கலை தெரிவித்துள்ளார்.
மனம் பதைக்கிறது! பாடகி பவதாரிணி மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல்!
இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் ‘அம்மாவின் வாசனை’ என்ற தலைப்பில் நான் எழுதிய கவிதையை, இசைஞானி இளையராஜா அவர்கள் பாடலாக இசையமைத்தார்கள். பவதாரணி அவர்களின் அழகான குரலில் அப்பாடல் பதிவு செய்யப்பட்டது.
அவர் பாடிய பிறகு அந்த கவிதை முழுமை பெற்றது. இதுவரை வெளியிடப்படாத அந்தப் பாடலை, அவர் நினைவாக இங்குப் பகிர்கிறேன்” என சற்று உருக்கமாக தனது இரங்கலை திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார். மேலும், பவதாரிணியின் உடல் இன்று மாலை இலங்கையில் இருந்து சென்னைக்கு கொண்டு வர இருக்கிறது. அஞ்சலிக்காக முருகேசன் தெரு தி நகரில் உள்ள இருக்கும் இளையராஜா வீட்டில் வைக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது. பவதாரிணியின் இறுதிசடங்கு நாளை காலை நடைபெறும் எனவும் தகவல்கள் கிடைத்துள்ளது.
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…