துப்பாக்கி கூட எடுத்து வர முடியும்.. பாதுகாப்பில்லாத சூழல்.! கனிமொழி எம்.பி காட்டம்.!

DMK MP Kanimozhi says about Parliament Security Breaches

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் சூழலில் கடந்த டிசம்பர் 13ஆம் தேதி நாடாளுமன்ற பார்வையாளர் அரங்கில் இருந்து கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மனோரஞ்சன் மற்றும் உத்திர பிரதேசத்தை சேர்ந்த சாகர் சர்மா ஆகியோர் மக்களவைக்குள் உள்ளே குதித்தனர். அவர்கள் காலில் மறைத்து வைத்து இருந்த வண்ண பூச்சிகளை வெளிப்படுத்தி அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

அதே நேரத்தில் வெளியில் ஹரியானாவை சேர்ந்த நீலம் எனும் மாணவி மற்றும் மகாராஷ்டிராவை சேர்ந்த அமோல் ஆகியோர் நாடாளுமன்ற வளாகத்தின் வெளியே அதே போல வண்ணப்பூச்சிகளை வெளிபடுத்தி கோஷமிட்டனர். அதனை லலித் என்பவர் படம்பிடித்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். இந்த வழக்கில் இதுவரை 6 பேர் கைது செய்ய்யப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பு அத்துமீறல் சம்பவம் : நாடாளுமன்றத்தில் தீக்குளிக்க திட்டம்.? டெல்லி போலீசார் அதிர்ச்சி தகவல்.!

இந்த விவகாரம் தொடர்பாக  நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.  இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும் என கோரினர். இந்த அமளி காரணமாக 15 மக்களவை உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து திமுக எம்பி கனிமொழி இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அவர் கூறுகையில், பாராளுமன்றத்திற்குள் நடந்திருக்கும் இந்த சம்பவமானது, பாராளுமன்றத்தில் யார் வேண்டுமானாலும் உள்ளே வந்து யாரை வேண்டுமானால் தாக்க கூடிய நிலை உள்ளது என வெளிக்காட்டுகிறது. நச்சுப்புகைக்கு பதில் துப்பாக்கி கூட கொண்டு வந்து இருக்கலாம். புதிய நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு இல்லை. அந்த சமயம் பிரதமர் மோடி இல்லை. ஒருவேளை அந்த நேரத்தில் இருந்திருந்தால் நிலைமை என்னவாகி இருக்கும்.? இதற்கு ஒன்றிய அரசு பொறுப்பேற்க வேண்டும். நாடாளுமன்றத்தில் முன்னர் தாக்குதல் நடந்த போது, அப்போதைய உள்துறை அமைச்சர் எல்.கே.அத்வானி அறிக்கை கொடுத்து இருக்கிறார். அதனை தான் நாங்கள் மீண்டும் கேட்கிறோம். இந்த சம்பவம் குறித்து ஆய்வு செய்தோம்.  நாங்கள் என்னென்ன நடவடிக்கை எடுத்துள்ளோம்  என உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளிக்க வேண்டும். அதனை கேட்டதற்கு தான் மக்களவையில் 15 பேர், ராஜ்ய சபாவில் ஒருவர் என 16 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளோம் என திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்