தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை மிகுந்த எதிர்பார்ப்புடன் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கி முடிவுக்கு வந்துள்ளது.அதற்கான முடிவுகள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டு வருகிறது.
வாக்கு எண்ணிக்கையில் ஆரம்பத்தில் இருந்தே திமுக முன்னிலை பெற்றது.திமுக 159 இடங்களிலும், அதிமுக 75 இடங்களிலும், மக்கள் நீதி மய்யம் 0, நாம் தமிழர் கட்சி 0, அமமுக 0, என முடிவு வந்துள்ளது.
இந்நிலையில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் 69,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.அவரை எதிர்த்து அதிமுக கூட்டணியில் களம்கண்ட பாமக வேட்பாளர் கஸ்ஸாலி வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.
இதற்கு வாழ்த்து தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள திமுக எம்.பி.கனிமொழி சேப்பாக்கம் தொகுதியில் மிக சிறப்பான வெற்றியை பெற்றிருக்கும் எங்கள் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினுக்கு எனது வாழ்த்துகள். முதல் முறையாக பொறுப்பேற்கும் உங்கள் பணிசிறக்க வாழ்த்துகள் என்று பதிவிட்டுள்ளார்.
சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜின், LCU-விற்கெனவே தனியாக ஒரு ரசிகர் கூட்டம் இருந்து வருகிறது. கூலி படத்திற்கு அடுத்தபடியாக,…
மும்பை : இந்திய அணியை தற்போது கேப்டனாக ரோஹித் சர்மா தான் வழிநடத்தி வருகிறார். அவருக்குப் பிறகு, இந்திய அணியை…
நியூ யார்க் : உலகமே எதிர்நோக்கி காத்திருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று (நவம்பர் 5) இந்திய நேரப்படி மாலை…
சென்னை : தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்றத்தை கண்டு வந்த காரணத்தால் நகை வாங்கும் நகை பிரியர்கள்…
சென்னை : மக்களை எமோஷனலில் உருக வைத்துள்ள அமரன் படம் வசூல் ரீதியாகவும் கலக்கிக் கொண்டு இருக்கிறது. வசூல் ஒரு…
சென்னை : தமிழக அரசின் முறைப்படி, அரசாங்க திட்டங்கள் மக்களை சென்றடைகிறதா என்பதை கள ஆய்வு மேற்கொள்ள அரசாங்க நிகழ்வுகளில்…