பிரதமர் உரை… அதுதான் அவர்களுக்கு தெரிந்த நாகரீகம்.! கனிமொழி எம்பி பேட்டி.!

PM Modi - DMK MP Kanimozhi

DMK MP Kanimozhiபிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக தமிழகம் வந்து இருந்தார். நேற்று திருப்பூர் பல்லடத்தில் பாஜக பொதுக்கூட்டம், மதுரையில் சிறு குறு தொழில் முனைவோர்களின் கருத்தரங்கம் , மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தரிசனம் என நேற்று பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்ட பிரதமர் மோடி இன்று தூத்துக்குடி, நெல்லை வந்திருந்தார்.

இதில் , தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். அதில், குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் அமைக்க அடிக்கல் உள்ளிட்ட 17300 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார். இந்த அரசு நிகழ்ச்சியில் தூத்துக்குடி திமுக எம்பி கனிமொழி, திமுக அமைச்சர் ஏ.வ.வேலு, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ReadMore – உங்கள் நம்பிக்கையை பாஜக நிச்சயம் நிறைவேற்றும்… பிரதமர் மோடி உத்தரவாதம்!

அப்போது பேசிய பிரதமர் மோடி, நலத்திட்ட உதவிகள் , கடல்சார் வணிகம், துறைமுகங்கள் பற்றி பேசினார். அப்போது திமுக எம்பி கனிமொழி மற்றும் அமைச்சர் ஏ.வ.வேலு ஆகியோர் பெயரை குறிப்பிடாமல் பதவிகளை மட்டுமே குறிப்பிட்டு பேசினார். மேலும் நெல்லையில் நடைபெற்ற மாநாட்டில், திமுக பற்றி கடுமையாக விமர்சித்தார். திமுக இனி இருக்காது என்றும் அவர் குறிப்பிட்டு பேசினார்.

Read More – வளர்ச்சியின் புதிய அத்தியாயம் தூத்துக்குடியில் தொடங்கியுள்ளது… பிரதமர் மோடி பேச்சு!

தூத்துக்குடியில் தனது பெயரை குறிப்பிடாதது பற்றி தூத்துக்குடி எம்பி கனிமொழி சென்னை விமான நிலையத்தில் செய்தியார்களிடம் பேசுகையில் பெயரை குறிப்பிடாதது தான் அவர்களுக்கு தெரிந்த நாகரீகம் என கூறினார். மேலும் அவர் பேசுகையில், குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைந்தது திமுகவுக்கு கிடைத்த வெற்றி. கலைஞரின் கனவு திட்டம் அது என குறிப்பிட்டார்.

Read More – விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதி காலியானதாக அறிவிப்பு!

அடுத்து,இந்த விழாவில் கலந்துகொள்ள எங்களுக்கு உரிமை உள்ளது.  மாநில அரசின் திட்டங்களுக்கு தான் மத்திய அரசு ஸ்டிக்கர் ஒட்டி வருகிறது. அவர்கள் (பாஜக) மதத்தை வைத்து பிரச்சாரம் செய்ய பார்க்கின்றனர். தமிழக மக்களுக்கு நன்றாக தெரியும் அரசியல் வேறு, மதம் வேறு என்று.  மக்களின் உரிமைகளுக்காக போராடும் கட்சி தான் திமுக. திமுக காணாமல் போகும் என கூறிய பலர் இங்கு காணாமல் போயுள்ளனர் என இன்று செய்தியாளர்களிடம் திமுக எம்பி கனிமொழி பேசினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்