திமுக எம்பி மீதான நிலஅபகரிப்பு வழக்குகள் ரத்து.! உயர்நீதிமன்றம் உத்தரவு.!

Default Image

திமுக எம்பி ஜெகத்ரட்சகன் மீதான நில அபகரிப்பு வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

1995ஆம் ஆண்டு குரோம்பேட்டையில் அமைந்துள்ள குரோம்பேட்டை லெதர் ஃபேக்டரியை தற்போதைய அரக்கோணம் எம்.பி ஜெகத்ரட்சகன் வாங்கியது தொடர்பாக புகார் எழுந்தது.

குவிந்தன் தாசன் என்பவர் நிலஅபகரிப்பு அடிப்படியில் கொடுத்த புகாரின் பேரில் சிபிசிஐடி போலீசார் 2 வழக்குகள் பதிந்து வழக்கை விசாரணை செய்து வந்தனர். இந்த வழக்குகளை ரத்து செய்ய கோரி திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் அமர்வு, இன்று இந்த வழக்கை முடித்துவைத்துள்ளது. ஜெகத்ரட்சகன் வாதத்தை ஏற்று, சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்