திமுக எம்பி ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் 3ஆவது நாளாக வருமான வரித்துறை சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் காலத்தில் அதிமுகவில் இருந்தவர் தான் தற்போதைய திமுக எம்பி ஜெகத்ரட்சகன். இதன்பின், 2009ல் திமுகவில் இணைந்த அவர், லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு மத்திய அமைச்சரானார்.அப்போது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், நிலக்கரி சுரங்க முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் புகார் எழுந்தது.
இதனைத்தொடர்ந்து, கடந்த 2020ல் சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக ஜெகத்ரட்சகன் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இந்த சோதனையை தொடர்ந்து அவரது சொத்துக்கள் முடக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்த சமயத்தில், அரக்கோணம் மக்களவை தொகுதி திமுக எம்பி ஜெகத்ரட்சகன் வீடு, அலுலவகம், கல்லூரி உளிட்ட பல்வேறு இடங்கள், அவரது நண்பர்கள், உறவினர்கள் வீடுகள் என பல்வேறு இடங்களில் கடந்த 2வது நாளாக வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
நேற்று முன்தினம் சுமார் 40க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது. அதன்படி, நேற்று முன்தினம் திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் உறவினர்கள், நண்பர்கள் என ஒரு சில வீடுகளில் சோதனை நேற்றுடன் நிறைவு பெற்ற நிலையில், நேற்று அடையாறில் உள்ள ஜெகத்ரட்சகன் வீடு, பூந்தமல்லியில் உள்ள கல்லூரி, தி நகரில் உள்ள ஹோட்டல், பட்டாபிராமில் உள்ள வீடு ஆகியவற்றில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்து சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியிருந்தது.
எம்பி ஜெகத்ரட்சகன், பல நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளதாகவும், அதற்கு முறையாக வரி செலுத்தவில்லை என்ற புகாரின் பேரில் சோதனை நடைபெறுவதாக கூறப்பட்டது. இந்த நிலையில், திமுக எம்பி ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் 3ஆவது நாளாக இன்றும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
அதன்படி, சென்னை கோடம்பாக்கம் மகாலிங்கபுரம் மற்றும் அடையாறு ஆகிய இடங்களில் அவரது வீடுகளில் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புடன் ரெய்டு நடைபெறுகிறது. மேலும், திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான கல்லூரியிலும் இன்று 3வது நாளாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…