கொரோனா வைரஸ் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவுக்குச் சில தளர்வுகள் அளிக்கப்பட்டு காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை விற்பனை செய்யும் கடைகளை காலை 06.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை திறந்திருக்க அனுமதிக்கப்பட்டது. இதேபோல், சிறு, குறு, நடுத்தர தொழிற்சாலைகளும் இயங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று முதல் அரசு டாஸ்மாக் கடைகளைத் திறக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் டாஸ்மாக் கடைகள் திறப்பு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து இருந்தார். அதில், “தமிழ்நாட்டில் ஏற்கனவே கரோனா அரக்கன் ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கும் நிலையில், மது அரக்கனும் களத்தில் குதித்து வீதிகளுக்கு வந்து சதிராட்டம் ஆடத் தொடங்கினால் அனைத்துத் தரப்பு மக்களின் நிலை என்னவாகும்? கரோனாவிடமிருந்து அவர்களை யாரால் காப்பாற்ற முடியும்?” என்று கேள்வி எழுப்பி இருந்தார். இந்நிலையில் இந்த பதிவிற்கு பதிலளிக்கும் வகையில் தருமபுரி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்.செந்தில்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பதில் பதிவு செய்துள்ளார். அதில், “உங்களால் முடியும் ஐயா உங்களால் முடியும். எவ்வளவோ பண்ணிட்டோம், இது பண்ண மாட்டோமா. சரி தானே ஐயா” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த இரு டுவிட்டுகளும் சமுக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…