உளவுத் துறையினர், தில்லியில் தன் அறையில் புகுந்து மிரட்டியதாக மக்களவை சபாநாயகரிடம் புகார் அளித்திருந்தார், இதுகுறித்து விசாரிக்க சபாநாயகர் உத்தரவு.
வேலுார் தொகுதி, திராவிட முன்னேற்ற கழக – நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்தை உளவுத்துறையினர் அவரது அறையில் புகுந்து மிரட்டியது தொடர்பாக சபாநாயகர் ஓம் பிர்லா அவர்கள், ‘இது மிகவும் சீரியஸான விஷயம்… உடனடியாக இதை தில்லி காவல்துறையினர் விசாரித்து அறிக்கை அளிக்க வேண்டும்’ என, தில்லி காவல்துறையினருக்கு உத்தர விட்டார். இது தொடர்பாக டில்லி காவல்துறையினர், தமிழ்நாடு இல்லத்திலிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், கதிர் ஆனந்தின் உதவியாளர், சிலரை, தமிழக இல்ல வாயிலில் இருந்து அழைத்துச் செல்வது போன்ற காட்சிகள் பதிவாகியிருந்தது. தமிழ்நாடு இல்ல அதிகாரிகளிடமும் இது குறித்து விசாரணை நடத்தப்பட்டது.’தமிழ்நாடு இல்லத்தில் யாரும் தன்னிச்சையாக நுழைந்துவிட முடியாது. வாயிலில் பாதுகாப்பு சோதனை நடக்கும். இது மட்டுமல்லாமல், ஒவ்வொரு மாடியிலும் சோதனை நடத்தப்படும்’ என, பாதுகாவலர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் விசாரணை விபரங்களை சபாநாயகருக்கு காவல்துறையினர் சமர்ப்பித்துவிட்டனர். உளவுத் துறையும், ‘எங்களுக்கும், கதிர் ஆனந்த் புகாருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை’ என, சபாநாயகருக்கு கடிதம் எழுதியுள்ளதாம். மக்களவை தேர்தலின் போது, கதிர் ஆனந்த் பணப்பட்டுவாடா செய்ததாக குற்றம் சாட்டப்பட்டதால் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டு, பின் நடந்தது. இது தொடர்பான விசாரணை நடந்து வருகிறது.இந்த சம்பவத்துக்கும், கதிர் ஆனந்த் புகாருக்கும் சம்பந்தம் இருக்குமா என, தில்லி காவல்துறையினர் சந்தேகப்படுகின்றனர். மற்றொரு பக்கம், இந்த விவகாரம் தொடர்பாக புகார் அளிக்கப்போவதாக, கட்சியின் மூத்த எம்.பி.,க்களிடம், கதிர் ஆனந்த் கலந்தாலோசிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் , பஞ்சாப் கிங்ஸ் அணியும் விளையாடின. இதில்…
லக்னோ : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…
லக்னோ : இன்று (ஏப்ரல் 1) நடைபெறும் ஐபிஎல் 2025 சீசனின் 13வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ்…
சென்னை : தமிழ் சினிமாவில் கமர்சியல் படங்கள் மூலம் எடுத்து ஹிட் கொடுத்து சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர்…
லக்னோ : தேசிய கல்வி கொள்கை 2020-ல் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய கோட்பாடுகளில் ஒன்று மும்மொழி கொள்கை. இந்த மும்மொழி கொள்கை…
கேரளா : மலையாள நடிகர் மோகன்லாலின் ''எம்புரான்'' படம் ஒரு புறம் வசூல் சாதனை செய்தாலும், மறுபுறம் சர்ச்சைகளால் சூழந்துள்ளது.…