அமைச்சர் செந்தில் பாலாஜி கைதா செய்யப்பட்டாரா.? விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டாரா என்பது தெரியவில்லை என திமுக எம்பி இளங்கோ கூறியுள்ளார்.
தமிழக மதுவிலக்கு ஆயத்தீர்வை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜின் வீடு , தலைமை செயலக அலுவலகத்தில் அமலாக்கத்துறையினர் சுமார் 18 மணிநேரம் சோதனை நடத்தி பின்னர் அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரணைக்காக கைது செய்து அழைத்து செல்லப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள்ளார். இதனை தொடர்ந்து, திமுக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன், சேகர் பாபு, எ.வ.வேலு, ரகுபதி திமுக எம்பிக்கள் என பலர் அங்கு வந்துள்ளனர். ஆனால், யாருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜியை பார்க்கும் அனுமதி வழங்கப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
திமுக எம்பி இளங்கோ செய்தியாளர்களிடம் கூறுகையில் அமைச்சர் செந்தில் பாலாஜி விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டாரா அல்லது கைது செய்யப்பட்டாரா என்ற எந்த தகவலை அமலாக்கத்துறை தெரிவிக்கவில்லை. அவர் கைது செய்யப்பட்டது சட்டவிரோதம் என்றும், அதற்கான எந்த விதிகளையும் அமலாக்கத்துறை பின்பற்றவில்லை மேலும், செந்தில் பாலாஜியை பார்ப்பதற்கு அமலாக்கத்துறையினர் அனுமதிக்கவில்லை எனவும் திமுக எம்பி என்ஆர்.இளங்கோவன் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று கடலூர் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது பெரியார் குறித்து பேசிய…
சென்னை : அமைச்சர் துரைமுருகன் எப்போது தன்னிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு நக்கல் நயாண்டிகளுடன் பதில் கூறுவதை பார்த்திருக்கிறோம். அப்படி தான்,…
சென்னை : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அஜித் ஒரு படத்தில் நடித்தால் எப்படி இருக்கும்? என்று நினைத்து பார்த்தாலே அஜித்…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றைய தினம் அதிகரித்து விற்பனையான நிலையில், இன்றும் உயர்ந்து காணப்படுகிறது. சென்னையில் நேற்று…
ஆந்திரப் பிரதேசம்: திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி தரிசனத்துக்கான இலவச டோக்கன் வழங்கும் மையங்களில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக தமிழகத்தை சேர்ந்த ஒருவர்…
ஆந்திரப் பிரதேசம்: ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி ஜனவரி 10 முதல் 19 வரை சொர்க்கவாசல் திறந்திருப்பதால் இலவச டிக்கெட்…