அமைச்சர் செந்தில் பாலாஜி கைதா.? விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டாரா.? திமுக எம்பி இளங்கோ பேட்டி.!

MInister Senthilbalaji

அமைச்சர் செந்தில் பாலாஜி கைதா செய்யப்பட்டாரா.? விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டாரா என்பது தெரியவில்லை என திமுக எம்பி இளங்கோ கூறியுள்ளார். 

தமிழக மதுவிலக்கு ஆயத்தீர்வை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜின் வீடு , தலைமை செயலக அலுவலகத்தில் அமலாக்கத்துறையினர் சுமார் 18 மணிநேரம் சோதனை நடத்தி பின்னர் அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரணைக்காக கைது செய்து அழைத்து செல்லப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள்ளார். இதனை தொடர்ந்து, திமுக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன், சேகர் பாபு, எ.வ.வேலு, ரகுபதி திமுக எம்பிக்கள் என பலர் அங்கு வந்துள்ளனர். ஆனால், யாருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜியை பார்க்கும் அனுமதி வழங்கப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

திமுக எம்பி இளங்கோ செய்தியாளர்களிடம் கூறுகையில் அமைச்சர் செந்தில் பாலாஜி  விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டாரா அல்லது கைது செய்யப்பட்டாரா என்ற எந்த தகவலை அமலாக்கத்துறை தெரிவிக்கவில்லை. அவர் கைது செய்யப்பட்டது சட்டவிரோதம் என்றும், அதற்கான எந்த விதிகளையும் அமலாக்கத்துறை பின்பற்றவில்லை மேலும், செந்தில் பாலாஜியை பார்ப்பதற்கு அமலாக்கத்துறையினர் அனுமதிக்கவில்லை எனவும் திமுக எம்பி என்ஆர்.இளங்கோவன் குற்றம்சாட்டியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்