தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.30 லட்சம் ஒதுக்கிய திமுக எம்பி
கொரோனா வைரஸை கட்டுப்படுத்தவும் அதனை பரவாமல் தடுக்கவும் மத்திய மாநில அரசுகள் கடுமையான முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.அதன் ஒரு பகுதியாக பிரதமர் மோடி இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவினை பிறப்பித்தார்.
எனவே கொரோனா தடுப்புப் பணிக்கு உதவிடும் வகையில் திமுக எம்.பி.க்கள் & எம்.எல்.ஏக்கள் அனைவரும் தேவையான பாதுகாப்பு உபகரணங்களைக் கொள்முதல் செய்வதற்கு அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் கலந்தாலோசித்து, தங்களது நாடாளுமன்ற / சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தேவையான நிதி ஒதுக்கீடு செய்திட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
இந்நிலையில் திமுக எம்பி கதிர் ஆனந்த் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அரசு மருத்துவமனை கொரோனா பிரிவுவிற்கும், ஆம்பூர் அரசு மருத்துவமனை கொரோனா பிரிவிற்கு தலா ரூ.15 லட்சம் வீதம் ஆக மொத்தம் ரூ.30 லட்சம் என வேலூர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒதுக்கி உள்ளதாக தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் *வாணியம்பாடி அரசு மருத்துவமனை கொரோனா பிரிவுவிற்கும்*, *ஆம்பூர் அரசு மருத்துவமனை கொரோனா பிரிவிற்கு* தலா 15இலட்சம் ரூபாய் வீதம் ஆக மொத்தம் 30 இலட்சம் ரூபாய் என, எனது வேலூர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒதுக்கி உள்ளேன்.@dmkathiranand @mkstalin @DMKITwing pic.twitter.com/sBfMqPjRHH
— D.M.KathirAnand (@dmkathiranand) April 2, 2020