டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமாரை தொடர்பு படுத்தி பேசிய விவகாரத்தில் திமுக எம்பி தயாநிதி மாறன் மீது தமிழக அரசு சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சமீபத்தில் நடந்த டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு விவகாரத்தில் அமைச்சர் ஜெயக்குமாரை தொடர்புப்படுத்தி பேசிய திமுக எம்.பி. தயாநிதி மாறன் மீது நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடுக்க தமிழக அரசு அனுமதியளித்தது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில், தயாநிதி மாறன் அதிமுக அமைச்சர் ஜெயக்குமாரை குற்றம்சாட்டி அளித்த பேட்டி ஒன்று வெளியானது.
இதைத்தொடர்ந்து அவரது பேட்டியானது உண்மை மற்றும் நம்பிக்கைக்கு எதிரானது என்றும், பொதுநலனுக்கு எதிராக வேண்டுமென்று அளிக்கப்பட்ட பேட்டி என தெரிவிக்கப்பட்டது. இதன்மூலம் ஐபிசி 499, 500-வது பிரிவுகளின் கீழ் தயாநிதி மாறன் அவதூறாக பேசி குற்றம் செய்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் தயாநிதி மாறன் மீது 1974-ம் ஆண்டு மத்திய சட்டத்தின்கீழ் அவதூறு வழக்குத் தொடுக்க ஆளுநரால் அனுமதியளிக்கப்பட்டு இருப்பதாகவும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டது.
இந்நிலையில் தேர்வு முறைகேடு தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமாரை தொடர்பு படுத்தி பேசிய விவகாரத்தில் திமுக எம்பி தயாநிதி மாறன் மீது தமிழக அரசு சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.இந்த மனுவில்,ஆதாரம் இல்லாமல் உண்மைக்கு புறம்பாக பேசிய தயாநிதி மாறன் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் நேற்று சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் மண்டபத்த்தில்…
சென்னை : ஐபிஎல் தொடரில் இன்று, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதியது. இவ்விரு…
பாங்காக் : மியான்மர் நாட்டில் இன்று மதியம் வேளையில், 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து 6.4 ரிக்டர்…
சென்னை : சேப்பாக்கத்தில் ருதுராஜ் தலைமையிலான சிஎஸ்கே அணியும், ரஜத் பட்டிதார் தலைமையிலான ஆர்சிபி அணியும் மல்லுக்கட்டி வருகின்றது. இரு…
சென்னை : ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான 8-வது போட்டி…
சென்னை : ஐபிஎல் 2025-ன் தொடரில் இன்று, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றனர்.…